டைட்டானிக் கப்பலை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இது மிகவும் பிரபலமான சொகுசு கப்பல். ஆனால் இது விபத்தில் சிக்கி பல பயணிகள் உயிரிழந்தனர். இதை மையமாக வைத்து டைட்டானிக் என்ற படம் கூட வெளிவந்து மிகப் பிரபலமாக உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது. இந்த கப்பலின் பெயர் ஆர் எம் எஸ் டைட்டானிக் என்ற ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் என்ற நகரில் இது உருவாக்கப்பட்டது.

1912 ஆம் ஆண்டு முதல் முதலாக சேவைக்கு இது விடப்பட்ட போது உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவி கப்பலாக பெயரெடுத்தது. தனது முதல் பயணத்தின் போது ஏப்ரல் 14 1912இல் இரவு 11.40 மணிக்கு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அடுத்து இரண்டு மணி நேரத்தில் இந்த கப்பல் முழுவதுமே கடலுக்குள் மூழ்கி போனது. அதில் பயணித்த 1053 பேர் உயிரிழந்தனர். அந்த காலத்தில் இது மிகப்பெரிய கடல் அழிவாக கருதப்பட்டது. கடலில் மூழ்கப்பட்ட இந்த டைட்டானிக் கப்பலால் இன்றளவும் கடலில் பயணம் செய்யும் மற்ற கப்பல்களுக்கு ஆபத்துகள் விளைகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம்.
இந்த டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் 4000 மீட்டர் ஆழத்திற்கு கீழ் பொதிந்து கிடக்கின்றன. அந்த இடத்தில சூரி ஒளி கூட ஊடுருவ முடியாது. இதை Midnight Zone என்றும் கூறுகின்றனர். டைட்டானிக் கப்பலை விபத்துக்கு உள்ளாக்கிய பனிப்பாறைகள் இன்னும் அந்த இடத்தில் உடைந்து மிதந்து கொண்டு தான் இருக்கிறது. டைட்டானிக் கப்பலின் சிதைவுகளில் ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அங்கே நீர்மூழ்கி கப்பல் மூலம் சென்றது. அவர்கள் டைட்டானிக் கப்பலை அடைய 3.8 கிலோமீட்டர் ஆழத்திற்க்கு சென்றனர். இந்த டைட்டானிக் கப்பல் விபத்து தான் உலகிலேயே மிகப்பெரிய கப்பல் vibathu என்று கருதப்பட்டு வருகிறது.
டைட்டானிக் கப்பல் விபத்தானது தற்போது மற்ற கப்பல் போக்குவரத்துக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது. டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கும் ஆழ்கடல் பகுதி அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. நீர்மூழ்கி கப்பலில் அவ்விடத்திற்கு பயணிக்கும் கப்பல் பயிலட்டுகள் இனர்சியல் நேவிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் அங்கு பயணிக்க முடியும். மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பல் இரண்டு பாகமாக பிளந்து கிடக்கிறது. அந்த இடத்தில் நீரோட்டத்தின் தன்மையே மாறி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கடலில் நடுப்பகுதியில் உள்ள வண்டல் மண்கள் டைட்டானிக் கப்பலாக இருப்பதால் சுழல் போன்றவற்றை உருவாக்குகிறது. டைட்டானிக் கப்பலை சுற்றி வேகமான நீரோட்டங்களின் தொடர் இயக்கத்தால் டைட்டானிக் கடலில் புதைந்து விடும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக கடலின் தரைப்பகுதியில் கிடந்ததால் டைட்டானிக் கப்பல் துருப்பிடித்து சிதற ஆரம்பித்துவிட்டது. இதனால் அங்கு ஒரு கப்பல் செல்லும் போது நீர்மூழ்கி கப்பலில் செல்லும் போது கூட அதன் சிதிலங்களில் மோத கூடும். 40 ஆண்டுகளில் டைட்டானிக் சிதைவுகளில் உள்ள பாக்டீரியாக்களும் அதிகரித்திருக்கிறதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடலுக்கு அடியில் இருக்கும் வண்டல் மண் பாய்சல்களாளும் அங்கு சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது அரிதாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். இந்த வண்டல் மண்கள் அதிகரிக்கும் போது பூகம்பங்கள் நில அதிர்வுகள் போன்றவைகள் ஏற்படும். இந்த டைட்டானிக் சிதைவுகள் பல ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
