இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து உள்ள நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களோடு நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார். நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் வருடம் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆனது நான்கு வருடத்தில் முடிவுக்கு வந்து விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள்.
பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நோயிலிருந்து மீண்டு வந்த இவர் இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தார். சாகுந்தலம், குஷி என இந்த இரண்டு படங்களும் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை.
)
சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை காதலை சேர்த்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். இந்நிலையில் நாக சைதன்யா தற்போது சோபிதா துலிப்பாலாவை இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார்.

இப்படியான நிலையில் தான் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டார்டப் நிறுவனமான அர்பன் கிஷான் என்ற நிறுவனத்தில் சமந்தா முதலீடு செய்துள்ளார். இந்நிறுவனத்தில் மண்ணே இல்லாமல் தண்ணீர் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை மட்டுமே வைத்து காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த உற்பத்தி திறன் மூலமாக மகசூலை அதிகம் பெருக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. 50 வகையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் பயிரப்பட்டு வருகின்றது. கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படும் சமந்தா அடிக்கடி அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கின்றார்.
