CINEMA
47வது பிறந்தநாள்.. சென்னை வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்ட விஷால்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக இடம் பிடித்துள்ளவர் தான் நடிகர் விஷால். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய விஷாலுக்கு இந்த திரைப்படம் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் விஷால் கேரியரில் பெரிய வெற்றி படமாக அமைந்தது என்று கூறலாம். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஷாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டியநாடு, பூஜை மற்றும் மருது உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.
இவர் நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் கலக்கி துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குனராக மாறிவிட்டார். அடுத்ததாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஷால் நேற்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவில் வளாகத்தில் தங்க தேர் இழுத்து வழிபட்டார்.