Connect with us

போடு வெடிய! 7 நாட்களில் கோடிகளை குவித்து மாபெரும் வசூல் சாதனை படைத்த… மாரிசெல்வராஜின் வாழை..!

CINEMA

போடு வெடிய! 7 நாட்களில் கோடிகளை குவித்து மாபெரும் வசூல் சாதனை படைத்த… மாரிசெல்வராஜின் வாழை..!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் தான் வாழை. சிறிய பட்ஜெட்டில் இந்த படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொன் வே ல் மற்றும் ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரை உலகின் பிரபல இயக்குனர்கள் மட்டும் நடிகர்கள் என பலரும் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை கட்டித்தழுவி பாராட்டினர்.

   

மக்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைக்கதை முதல் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் வரை ஒட்டுமொத்த படமும் மக்களின் உச்சகட்ட ஆதரவை பெற்று வருகின்றது. இந்த படம் தான் இயக்குனர் மாறி செல்வராஜின் முதல் படமாக வெளிவந்திருக்க வேண்டுமாம். இந்த திரைப்படத்தின் கதையை தான் முதன் முதலில் அவர் துணை இயக்குனராக இருந்தபோது எழுதியுள்ளார்.

   

 

தனது சிறுவயதில் அனுபவித்த வழிகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். அந்த வலிகளை திரையின் மூலம் படம் பார்ப்பவர்களுக்கும் கடத்தினார். குறிப்பாக படத்தில் கிளைமாக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் கலங்க வைத்தது. முதல் நாளிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

author avatar
Nanthini

More in CINEMA

To Top