ASTROLOGY
பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிவது முக்கியமானதா…? சாஸ்திரம் கூறுவது என்ன…?
பெண்கள் என்றாலே அழகுதான். அவர்களின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்ப்பது வளையல், கொலுசு, கம்மல் பொட்டு, மெட்டி, சந்தனம், குங்குமம் போன்றவைகள் ஆகும். தங்க வளையல்களை விட கண்ணாடி வளையல்களை பெண்கள் அணிவது மிகவும் சிறப்பானது என்பது உங்களுக்கு தெரியுமா? கண்ணாடி வளையல் அணிந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் சாஸ்திரம் என்ன கூறுகிறது என்பதை பற்றி இனி காண்போம்.
ஜோதிட சாஸ்திரப்படி கண்ணாடி வளையல்கள் அணிவது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. திருமணமான பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணியாமல் இருப்பது அசுபம் ஆகும். ஏனென்றால் திருமண வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் வளையல்கள் அணியாமல் இருந்தால் அது தங்களது கணவரையும் குழந்தைகளையும் பாதிக்கும் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள பெண்கள் கண்ணாடி வளையல்கள் தொடர்ந்து அணிந்தால் அது நல்வாழ்வை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி கண்ணாடி வளையல்களை அணிவிப்பது நாம் பார்த்திருப்போம். ஜோதிட சாஸ்திரம் மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் இது நிரூபணம் ஆகி உள்ளது. கண்ணாடி வளையல்களில் ஏற்படும் ஒலியானது நேர்மறை சக்திகளை அதிகமாக உள்ளிழுக்கும் தன்மை கொண்டது. இது வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு நன்மை பயக்கும் என்ற நோக்கிலே நம் முன்னோர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி இருக்கின்றனர்.
கண்ணாடி வளையல்களில் அணிந்து கொள்ளும் போது அது நம் மணிக்கட்டில் பட்டு அசைந்து ஒலி எழுப்புவதால் நேர்மறை சக்திகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சரி செய்ய உதவுகிறது. பெண்களுக்கான உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வை முக்கியமாக இந்த வளையல் ஒளி நீக்குகிறது. நம் முன்னோர்கள் எந்த ஒரு சாஸ்திரத்தையுமே அறிவியல் ரீதியாகவே ஆராய்ந்து அதே பக்திமயமாக கடைபிடிக்க சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் கண்ணாடி வளையல்கள் அணிவது மிகவும் முக்கியமான ஒன்று. திருமணமான பெண்கள் கண்ணாடி வளையல் அணிவது மூலம் வீட்டில் செல்வ வளம் பெருகும் நன்மைகள் உண்டாகும்.