CINEMA
ஆனந்தியை மண்ணுக்குள் புதைத்த கும்பல்.. அன்புவிடம் தனது காதலை போட்டுடைத்த மகேஷ்.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்க பெண்ணே சீரியல்..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை தனுஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தினமும் விறுவிறுப்பான கதைக்களத்தோடு சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. செவரக்கோட்டையில் நடைபெறும் திருவிழாவிற்காக அன்பு, ஆனந்தி, மகேஷ், மித்ரா உள்ளிட்டோர் வந்தனர்.
திருவிழா ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து ஆனந்திக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் சுயம்புலிங்கம் வம்புக்கு இழுத்ததால் அன்பும் மகேஷும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர். ஆனந்தி தீ மிதிக்கும் போது சுயம்புலிங்கம் சதி செய்து பேனரை கீழே உள்ள செய்கிறார். அப்போது அதிர்ஷ்டவசமாக அன்புவும், மகேஷும் பேனரை பிடித்துக் கொண்டதால் ஆனந்தி அதிலிருந்து தப்பித்து விடுகிறார்.
அண்ணனை பார்ப்பதற்காக யாரும் இல்லாத நேரத்தில் கோவிலுக்கு சென்ற ஆனந்தி மீது திருட்டு பழி விழுகிறது. ஊரில் உள்ள அனைவரும் ஆனந்தி தான் குற்றவாளி என நினைக்கின்றனர். இதனால் எப்படியாவது திருடர்களை பிடித்து விட வேண்டும் என ஆனந்தி நினைக்கிறார். இன்றைய சிங்கப்பெண்ணை சீரியல் ப்ரோமோ வெளியானது. அதில் சதிகாரர்கள் ஆனந்தியை மண்ணுக்குள் புதைத்து விடுகின்றனர். மகேஷும் அன்பும் ஆனந்தியை தேடி அலைகின்றனர்.
அப்போது கால் தடுக்கி கீழே விழும் அன்புக்கு மண்ணுக்குள் இருந்து அழகா என்ற குரல் கேட்கிறது. உடனே அன்பு மகேஷ் உதவியுடன் ஆனந்தியை காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் மகேஷ் நான் காதலித்த பெண் ஆனந்தி தான் என்ற உண்மையை அன்புவிடன் போட்டு உடைக்கிறார். இதனை கேட்டதும் அன்பு அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அன்பு என்ன செய்யப் போகிறார்? தனது காதலி ஆனந்தியுடன் எப்படி சேரப் போகிறார்? என்பதை இனிவரும் எபிசோடில்தான் பார்க்க வேண்டும்.