Connect with us

மீனாவுக்கு ஆதரவாக விஜயாவிடம் சண்டை போடும் ஸ்ருதி… சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…

CINEMA

மீனாவுக்கு ஆதரவாக விஜயாவிடம் சண்டை போடும் ஸ்ருதி… சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…

சிறக்கடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ஸ்ருதி விஜயாவை நன்றாக பயமுறுத்தி கதற வைக்கிறாள். மனோஜும் ஒரு பக்கம் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கிறான். அத்துடன் நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனி காண்போம்.

   

இன்றைய எபிசோடில் விஜயா பயந்து அலறிக்கொண்டு ரூம்மை விட்டு வெளியே ஓடி வருகிறாள். மனோஜ் அவன் ரூம்மை விட்டு வெளியே வந்ததும் மனோஜை பார்த்து கத்துகிறாள் விஜயா. பின்னர் மீனா ஓடிவந்து லைட்டை ஆன் செய்கிறாள். மனோஜூம் விஜயாவும் சேர்ந்து சுருதியையும் மீனாவையும் கண்டபடி திட்டுகின்றனர். இந்த நேரத்தில் விளையாட்டு கேக்குதா உங்களுக்கு ஏன் இப்படி பயமுறுத்துறீங்க. இதுல ஏன் விளையாடுறீங்க கொஞ்ச நேரத்துல எனக்கு நெஞ்சுவலியே வந்திருக்கும் அப்படின்னு மனோஜ் சொல்லிவிட்டு இருவரும் தூங்க சென்று விடுகின்றனர். மீனா ஸ்ருதியிடம் ஏன் ஸ்ருதி இப்படி பண்ணீங்க. இந்த வீட்ல யாரு என்ன பண்ணாலும் நாளைக்கு சேர்த்து வச்சு அத்தை என்னதான் திட்டுவாங்க அப்படின்னு சொல்கிறாள் மீனா. சுருதி பரவால்ல மீனா இருக்கட்டும் பாத்துக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு போய் எல்லாரும் தூங்கிடறாங்க.

   

மறுநாள் காலையில் முத்து சவாரி முடிந்து வீட்டுக்கு வருகிறான். மீனாவிடம் சவாரி பணத்தை கொடுத்து உண்டியலில் போட சொல்கிறான். என்னாச்சுங்க ஏன் ரொம்ப டயர்டா இருக்கீங்க அப்படின்னு கேக்கிறாள் மீனா. ஆமாம் ரொம்ப தூரம் போயிட்டு வந்ததுனால உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது அப்படின்னு சொல்கிறான் முத்து. உடனே மீனா நீங்க இருங்க நான் போய் எண்ணெய் காய்ச்சி எடுத்துட்டு வரேன் நல்லா தேச்சு குளிச்சீங்கன்னா உங்களுக்கு சரியாகும் அப்படின்னு சொல்லிட்டு மீனா செல்கிறாள். கிச்சனிலிருந்து என்னை எடுத்து வரும்போது ரவியிடம் கோபப்பட்டு கொண்டு வந்த சுருதி தட்டி விட்டு விடுகிறாள். எண்ணெய் கீழே சிந்தி விடுகிறது. மீனாவிடம் சாரி சொல்கிறாள். பரவால்ல சுருதி நீங்க போங்க நான் கிளீன் பண்ற அப்படின்னு மீனா கிச்சனுக்குள் செல்கிறாள்.

 

இதற்கிடையில் அங்கு வந்த விஜயா தரையில் எண்ணெய் சிந்தி இருப்பதை பார்க்காமல் அதில் வழுக்கி கீழே விழுந்து விடுகிறாள். விஜயாவுடனும் சேர்ந்து மீனாவும் கீழே விழுந்து விடுகிறாள். உடனே அங்கே எல்லோரும் வந்து விடுகின்றனர். விஜயா மீனாவை திட்டுகிறாள். நீ வேணுன்னு தான் பிளான் பண்ணி இப்படி பண்ணிருப்ப என் கைய கால ஒடச்சு என்ன படுக்க வைக்கணும் தான் நீ இப்படி செஞ்சிருப்ப அப்படின்னு சொல்லி காட்டுகிறாள்.

ஸ்ருதி இல்ல ஆன்ட்டி என் மேல தான் தப்பு. நான்தான் தட்டி விட்டுட்டேன் அப்படின்னு சொல்கிறாள். பின்னர் மனோஜ் வந்து விஜயாவை தூக்குகிறேன் என்று சொல்லி அவனும் கீழே விழுந்து விஜயாவையும் மறுபடி கீழ தள்ளி விட்டு விடுகிறான். உடனே ரவி எல்லாரும் சேர்ந்து விஜயாவை உட்கார வைத்து ரோகிணி விஜயாவிற்கு காலில் ஸ்பிரே போட்டு விடுகிறாள். அப்போ விஜயா இந்த மீனா வேணும்னே எல்லாமே பண்ணி இருப்பா என் மண்டையை உடைக்கணும் என்ன படுத்த படுக்கையாக்க வேண்டும் தான் இது மாதிரி பிளான் பண்ணி செஞ்சுருப்பா அப்படின்னு விஐயா பேசுகிறாள்.

அப்போது அங்கு ரொம்ப கோபமாக வந்த சுருதி மீனாவுக்கு ஆதரவாக விஜயாவிடம் சண்டை இடுகிறாள். என்ன ஆன்ட்டி உங்களுக்கு என்ன தான் பிரச்சனை எப்ப பார்த்தாலும் ஏன் மீனாவே நீங்க திட்டிக்கிட்டே இருக்கீங்க. அவங்களே பாயிண்ட் அவுட் பண்ணி பேசிட்டு இருக்கீங்க. இந்த விஷயத்துல முழுக்க முழுக்க தப்பு என்னோடது தான் மீனா கரெக்டா தான் வந்தாங்க நான் தான் கவனிக்காம வந்து அவங்க மேல இடிச்சிட்டேன். இதுல அவங்க மிஸ்டேக் எதுவுமே இல்லை என்னோட மிஸ்டேக் தான் நீங்க இப்படி பண்றது நல்லா இல்ல இனிமே இப்படி நீங்க அவங்கள எதுக்கெடுத்தாலும் திட்டிக்கிட்டே இருக்காதீங்க அப்படின்னு கத்திட்டு சுருதி சென்று விடுகிறாள். உடனே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ரோகிணி பாத்திங்களா ஆன்ட்டி அந்த மீனா சுருதியையும் தான் பக்கம் பேசி பேசி இழுத்துக்கிட்டாங்க. இப்ப ஸ்ருதி அவங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க பாருங்க உங்களை எப்படி கீழே தள்ளிவிட்டு இருக்காங்க அப்படின்னு ரோகினி ஏத்தி விடுகிறாள். உடனே விஜயா கடும் கோபத்தில் இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டணம் என்று யோசிக்கிறாள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top