விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி TRP-ல் டாப் லிஸ்ட்டை பிடித்த சன் டிவி சீரியல்கள்.. முதலிடம் எந்த சீரியலுக்கு தெரியுமா..?

By admin on ஆவணி 30, 2024

Spread the love

சன் டிவியும் விஜய் டிவியும் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை களம் இறக்கியது. இந்த வாரம் டTRP-யில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கயல்:
TRP-யில் 8. 96 புள்ளிகளுடன் கயல் சீரியல் முதல் இடத்தில் உள்ளது. ஆரம்பத்திலிருந்து கயலுக்கு அடுத்தடுத்த தொந்தரவுகள் வந்து கொண்டே இருந்தது. இப்போது நிலைமை மாறி பாசிட்டிவான கண்ணோட்டத்தில் சீரியல் ஒளிபரப்பு ஆகிறது. இதனால் ரசிகர்கள் கயல் சீரியலை விரும்பி பார்க்கின்றனர். கயல் எழிலின் திருமண கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளது.

டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம்
சிங்க பெண்ணே:
TRP-யில் 8.77 புள்ளிகள் பெற்று சிங்க பெண்ணே சீரியல் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகேஷ், அன்பு இருவரும் ஆனந்தியை உயிருக்குயிராக காதலிக்கின்றனர். சொந்த ஊருக்கு சென்ற ஆனந்திக்கு பல சிக்கல்கள் வருகிறது. அதிலிருந்து ஆனந்தியை காப்பாற்ற அன்பும் மகேஷும் முயற்சி செய்கின்றனர். விறுவிறுப்பான எபிசோடுகளுடன் சிங்கப்பெண்ணே சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

   

Singapenne serial on suntv | Facebook

   

மூன்று முடிச்சு:
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சன் டிவியில் மூன்று முடிச்சு சீரியல் ஒளிபரப்பானது. வித்தியாசமான கதைக்களத்தோடு சீரியல் நகர்வதால் ரசிகர்கள் மூன்று முடிச்சு சீரியல் விரும்பி பார்க்கின்றனர். TRP ரேட்டிங்கில் 8.16 புள்ளிகள் உடன் மூன்று முடிச்சு சீரியல் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

சன் டிவியில் விஜய் டிவி நடிகை நடிக்கும் மூன்று முடிச்சு சீரியல்.. அப்போ டாப் சீரியல் முடியப்போகிறதா | sun tv moondru mudichu serial Actress Swathi new promo - Tamil ...
மருமகள்:
சன் டிவியில் ஒளிபரப்பாக மருமகள் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிரபு மற்றும் ஆதிரையின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த பல சதி வேலைகள் நடக்கிறது. அதனை தாண்டி நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது. அடுத்ததாக திருமண த்திற்கு வேறு என்ன சிக்கல்கள் வரப்போகிறது என்பது தெரியவில்லை. பரபரப்பான திருப்பங்களுடன் நகர்வதால் TRP-யில் 8.02 புள்ளிகளை பெற்று மருமகள் சீரியல் நான்காவது இடத்தில் உள்ளது.


சிறகடிக்க ஆசை:
எப்போதும் TRP- யில் முதல் இரண்டு இடத்தை தக்க வைத்துக் கொண்ட சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலை பலர் விரும்பிப் பார்த்தனர். ஆனால் இந்த வாரம் 7.95 புள்ளிகள் பெற்று சிறகடிக்க ஆசை சீரியல் TRP-யில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.


மல்லி:
சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி சீரியலும் விறுவிறுப்பான கதை களத்துடன் நகருகிறது. வெண்பாவுக்கு அம்மாவாக நடிக்க வரும் மல்லி பல சிக்கல்களை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் உயிருக்கு போராடி அதிலிருந்து மீண்டு வருகிறார். மல்லி சீரியல் TRP-யில் 7.52 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளது.