vishal

பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க 20 கோடி கேட்ட விஷால்… மார்க்கெட் இல்லனு இப்படி இறங்கிட்டாரா…?

By admin on கார்த்திகை 19, 2024

Spread the love

விஷால் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். இவரது முழு பெயர் விஷால் கிருஷ்ணா ரெட்டி என்பதாகும். இவரது தந்தை ஜிகே ரெட்டி பிரபல தயாரிப்பாளர் ஆவார். விஷால் ஆக்சன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 2004 ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஷால்.

   

அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு சண்டக்கோழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விஷால். தொடர்ந்து திமிரு சிவப்பதிகாரம் தாமிரபரணி மலைக்கோட்டை தோரணை தீராத விளையாட்டுப் பிள்ளை அவன் இவன் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஷால்.

   

நல்ல உயரமும் சிக்ஸ் பேக் பாடி கொண்டிருப்பதால் எந்த கதாபாத்திரம் ஆனாலும் அவருக்கு பொருந்தியது. மிகவும் எதார்த்தமாக நடிக்க கூடியவர் விஷால். தொடர்ந்து துப்பறிவாளன் இரும்புத்திரை சண்டக்கோழி 2 அயோத்தியா மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் விஷால்.

 

தற்போது விஷால் துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு வில்லனாக நடிக்க விஷால் இடம் பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. அப்போது விஷால் வில்லனாக நடிக்க 20 கோடி கேட்டிருக்கிறார். இதை அறிந்த ரசிகர்கள் எவ்வளவு டாப் நடிகராக இருந்த விஷால் மார்க்கெட் இல்லாமல் தற்போது வில்லனாக கூட நடிக்க இறங்கிவிட்டார் என்று பேசி வருகின்றனர்.