29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.. ஏ.ஆர் ரஹ்மானை பிரிவதாக அறிவித்த மனைவி சாய்ரா பானு..!

By Nanthini on கார்த்திகை 20, 2024

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ.ஆர் ரகுமான். ஆஸ்கார் விருது பெற்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா மற்றும் ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் இசையமைப்பாளராக முயற்சி மேற்கொண்டு வருகின்றார். சமீப காலமாகவே தன்னுடைய அப்பாவுடன் பல மேடைகளில் தோன்றி வருகிறார். இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அறிவித்த மனைவி! மகன் அமீன் வைத்த கோரிக்கை

   

சாய்ரா பானு தன்னுடைய கணவர் ஏ ஆர் ரகுமானை பிரிவதாக அவருடைய வழக்கறிஞர் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர் ரகுமானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இருவருக்குமான இடைவேளியை தொடர்ந்து வழி மற்றும் வேதனையும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இசையை விட்டுவிட்டு வேறு துறையில் சாதித்த மகள்.. ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சியான  பதிவு - சினிஉலகம்

 

இதன் மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் சார்பில் இது பற்றி எந்த ஒரு விளக்கமும் தற்போது வரை வழங்கப்படவில்லை. ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானு தம்பதியின் இரண்டு மகள்களில் மூத்த மகள் கதீஜாவுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இரண்டாவது மகளும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர். இப்படியான நிலையில் சாய்ராம் பிரிவதாக கூறியுள்ளதால் ஏ ஆர் ரகுமான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.