siva sk

சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஜெயம்ரவியா…? இது லிஸ்ட்லயே இல்லையே…

By admin on கார்த்திகை 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் சின்னத்திரை விஜய் டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் மிமிக்ரி செய்பவராகவும் தனது கேரியரை ஆரம்பித்தார். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

   

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. படம் வெளியாகி 18 நாட்களிலேயே 300 கோடியை தொட்டு வசூல் சாதனையை படைத்திருக்கிறது அமரன் திரைப்படம். இன்றளவும் இந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

   

 

இந்நிலையில் அமரன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பதற்கு கையொப்பமிட்டு இருக்கிறார். அதன்படி சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புறநானூறு என்ற திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. இப்படத்தை எடுப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்தச் செய்தி தற்போது ரசிகர்களிடையே பெரும் வியப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.