Connect with us

சில்க் ஸ்மிதா உங்க மகள் மாதிரி இப்படி பண்ணலாமான்னு… ஓபனாக பகிர்ந்த வினுசக்கரவர்த்தி…

CINEMA

சில்க் ஸ்மிதா உங்க மகள் மாதிரி இப்படி பண்ணலாமான்னு… ஓபனாக பகிர்ந்த வினுசக்கரவர்த்தி…

வினு சக்கரவர்த்தி தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராகவும் வில்லன் நடிகராகவும் நடித்ததால் பிரபலமானவர். 2007 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி திரைப்படம் இவர் நடித்த ஆயிரமாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

   

வினு சக்கரவர்த்தி தனது படிப்பை முடித்ததும் ஆறு மாதங்கள் இன் ஹவுஸ் காவல்நிலையத்தில் ரிசர்வ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். பிறகு தெற்கு ரயில்வேயில் நான்காண்டுகள் பணிபுரிந்தார். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் நாடக குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க தொடங்கி பின்னர் வசனமும் எழுத தொடங்கினார் வினு சக்கரவர்த்தி.

   

ஆரம்பத்தில் வினு சக்கரவர்த்தி கன்னட இயக்குனர் புட்டன்னா கனகலுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக பணியில் சேர்ந்தார். பிறகு திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் மணியால் கவனிக்கப்பட்ட வினு சக்கரவர்த்தி 1977 ஆம் ஆண்டு கன்னட திரைப்படம் ஒன்றில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அது பின்னர் தமிழில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று 1979 ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது.

 

பிறகு வினுசக்கரவர்த்தி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இது தவிர சொந்தமாக பல படங்களின் இயக்கியுள்ளார் வினுசக்கரவர்த்தி. தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவை கண்டுபிடித்து தனது படத்தில் அறிமுகப்படுத்தியவர் வினு சக்கரவர்த்தி தான் என்பது பலருக்கும் தெரியாது. சில்க் ஸ்மிதாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் வினு சக்கரவர்த்தி.

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட வினு சக்கரவர்த்தியிடம் சில்க் ஸ்மிதாவை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அது என்னவென்றால் நீங்கள் சில்க் ஸ்மிதாவை என் மகளாக நினைக்கிறேன் என்று கூறுகிறீர்கள் அப்படி மகளாக நினைத்த சில்க் ஸ்மிதாவை ஏன் கவர்ச்சி பாத்திரத்தில் நடிக்க வைத்தீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வினு சக்கரவர்த்தி நான் முதல் படத்தில் அவளை நல்ல முறையாக தான் நடிக்க வைத்தேன். அதற்குப் பிறகு அவர் நடித்ததற்கு எல்லாம் நான் பொறுப்பு கிடையாது. என்னை பொறுத்த வரைக்கும் நான் ஒரு ஆசிரியர் சில்க் ஸ்மிதா ஒரு மாணவி அவ்வளவுதான் என்று கூறி இருக்கிறார் வினு சக்கரவர்த்தி.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top