CINEMA
போனது 45 கோடி… வந்தது வெறும் ஒரு லட்சம்… படுதோல்வியான இந்தப் படத்தைப் பற்றி தெரியுமா…?
சினிமாவில் எந்த ஒரு நடிகரானாலும் சரி இயக்குனர் ஆனாலும் சரி தயாரிப்பாளர் ஆனாலும் சரி அந்த படம் மெகா ஹிட் ஆக வேண்டும் எல்லா மக்களையும் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே படம் தயாரிப்பர். ஆனால் என்னவோ ஒரு சில படங்கள் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டாலும் தோல்வியே தழுவும். ஒரு சில படங்கள் யாரும் எதிர்பாரா வகையில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். அந்த வரிசையில் மிகுந்த செலவில் எடுக்கப்பட்டு கடைசியில் தோல்வி அடைந்த ஒரு படத்தை பற்றி இனி காண்போம்.
எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்டு படுதோல்வியை சந்தித்த அந்த திரைப்படத்தின் பெயர் தி லேடி கில்லர் என்பதாகும். இது 2023 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி மொழி கிரைம் தில்லர் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இயக்கியவர் அஜய். இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் அர்ஜுன் கபூர் மற்றும் பூமி பட்நேக்கர் ஆவர். படத்தை தயாரித்தவர்கள் பூஷன் குமார், கிருஷ்ணன் குமார் சைலேஷ் மற்றும் சஹில் மிச்சாந்தனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்திய அளவிலேயே வெறும் 293 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை ஆகி இருந்தன. இதன் முதல் நாள் வசூல் ரூ. 38000 மட்டுமே ஆகும். இந்த படத்திற்கான தயாரிப்பு செலவு மொத்தம் 45 கோடியாகும். ஆனால் இந்த படத்தினால் கிடைத்த வரவு வெறும் ஒரு லட்சம் மட்டுமே. இது வரையில் மிகவும் மோசமான தோல்வியை தழுவியது தி லேடி கில்லர் திரைப்படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.