Connect with us

சாய் பல்லவி வீட்டில் சத்தமில்லாமல் நடந்த விசேஷம்.. வெளியான புகைப்படத்தை பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்..!

CINEMA

சாய் பல்லவி வீட்டில் சத்தமில்லாமல் நடந்த விசேஷம்.. வெளியான புகைப்படத்தை பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்..!

பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை சாய் பல்லவி. அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய படங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுவதால் தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். அதன்படி தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகின்றார்.

   

இப்படி சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சாய் பல்லவிக்கு பூஜா என்ற ஒரு தங்கை உள்ளார். இவர் சமுத்திரகனிவுடன் இணைந்து சித்திரை செவ்வானம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சரியானது ஒரு இடத்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தால் சினிமாவிலிருந்து விலகிய பூஜா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். தற்போது சினிமாவில் தொடராமல் தனது காதலரை பூஜா கரம் பிடித்துள்ளார்.

   

 

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் வெளியான சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் மகளாக பூஜா கண்ணன் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிமுகமானார். இவர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் படத்துடன் சினிமா எல்லாம் நமக்கு செட் ஆகாது அதையெல்லாம் அக்காவை பார்த்துக் கொள்ளட்டும் என்று பூஜா கண்ணன் நினைத்துள்ளார்.

இவருக்கு தனது காதலர் வினித் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் அதில் பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக வீட்டில் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

author avatar
Nanthini
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top