விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது ஏழு சீசன்களை கடந்துள்ள நிலையில் விரைவில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை தொகுத்து வழங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போவது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில் நேற்று அந்த எதிர்பார்ப்பை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
அதாவது நேற்று மாலை தனது சமூக வலைத்தளத்தில் புரோமோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீசன் தொகுப்பாளராக விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியை வைத்து அன்னையில் பாண்டிச்சேரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ சூட் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய தொகையை சம்பளமாகவும் பேசி உள்ளனர்.
அதாவது கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கடந்த சீசனில் 120 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருந்தார். இணையத்தில் தற்போது உலா வரும் தகவலின் படி விஜய் சேதுபதிக்கு 50 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் நடிகர் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க 35 கோடி சம்பளம் வாங்கி வருவதாகவும் இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு 50 கோடி சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.