CINEMA
ஏ. ஆர். ரஹ்மான் இந்த உதவிகளெல்லாம் பண்ணியிருக்காரா…? ஆச்சர்யப்பட வைக்கும் இசைப்புயல்…
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பதாகும். இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ஏ ஆர் ரகுமான். தனது இசையுலக பயணத்தை சிறுவயதிலிருந்தே ஆரம்பித்தவர் ஏ ஆர் ரகுமான். இவரது குடும்பம் இசையைச் சார்ந்தது. இவரின் தந்தை ஆர்கே சேகர் மலையாள திரைப்பட துறையில் பணியாற்றியவர். சிறுவயதிலேயே தந்தை இழந்ததால் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு வந்த வருமானத்தில் பியானோ ஹார்மோனியம் மற்றும் கீதார் வாசிக்க கற்றுக் கொண்டு 11 வயதில் இளையராஜா அவர்களின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார்.
எம்எஸ் விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார் ஏ ஆர் ரகுமான். 1992 ஆம் ஆண்டு தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார் ஏ ஆர் ரகுமான். அந்த ஆண்டு மணிரத்தினம் தனது திரைப்படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை ஏ ஆர் ரகுமானுக்கு வழங்கினார். அப்படி 1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது முதல் படத்தின் மூலமாகவே தேசிய விருதினையும் வென்றார் ஏ ஆர் ரகுமான்.
பின்பு பல வெற்றி திரைப்படங்களில் இசையமைத்த ஏ ஆர் ரகுமான் ஹாலிவுட் திரைப்படத்திற்கு இசையமைத்து ஆஸ்கார் விருதினை வென்றார். தனது இசைக்காக ஆஸ்கார் விருதினை தவிர கோல்டன் குளோப் விருது, தேசிய திரைப்பட விருது, பத்மபூஷன் ஆகிய விருதுகளை வென்றவர். இந்திய அரசின் பத்மபூஷன் விருது இவருக்கு 2019 இல் வழங்கப்பட்டது. ஆசியாவின் மெர்ச்சண்ட் என்றும் அழைக்கப்படுபவர் ஏ ஆர் ரகுமான்.
இசைக்காக மட்டுமல்லாமல் ஏ ஆர் ரகுமான் மிகவும் எளிமையான மனிதர் அமைதியானவர் அவரது குணத்திற்காகவே மக்கள் இவரை விரும்பினர். இது மட்டுமல்லாமல் ஏ ஆர் ரகுமான் வெளி உலகத்துக்கு தெரியாமலே பல உதவிகளை இசையின் மூலம் செய்து வந்துள்ளார். அது என்னவென்றால் சென்னை மாநகராட்சி அரசு பள்ளியில் பின் தங்கிய வகுப்பு இனத்தை சேர்ந்த 15 பிள்ளைகளை தேர்ந்தெடுத்து மேற்த்திய இசையை கற்றுக் கொடுத்து Sunshine Orcheastra என்ற இசைக்குழுவை உருவாக்கி இருக்கிறார். தற்போது இந்த குழுவில் 50 பிள்ளைகள் இசையை கற்று தயாராக இருக்கின்றனர். இவர் இது போன்ற உதவிகளை செய்து எந்த விளம்பரமுமே இல்லாமல் சைலன்டாக செய்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.