தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விமல். திருச்சி மணப்பாறையை சேர்ந்த விமல் நடிகராகும் ஆசையில் சென்னை வந்து கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்த விமல், ‘கில்லி’ உள்ளிட்ட பல படங்களிலும் கூட்டத்தில் ஒருவராக நிற்கும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். 2009ம் வருடம் பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க’ திரைப்படம் மூலம் சினிமாவில் நடித்த தொடங்கினார்.
அதன்பின் விமல் நடித்த களவாணி திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மஞ்சப்பை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அவற்றில் தேசிங்கு ராஜா உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.
இடையில் சொந்தமாக படங்களை தயாரித்து பல கோடி நஷ்டமும் அடைந்தார். கடந்த சில வருடங்களாகவே விமலுக்கு சரியான வெற்றிப்படம் அமையவில்லை. இந்நிலையில் 2025ம் வருடம் அவரின் நடிப்பில் வெளியான படவா, பரமசிவன் பாத்திமா, தேசிங்கு ராஜா 2, மகாசேனா உள்ளிட்ட எல்லா படங்களுமே தோல்வி அடைந்து, இந்த வருடம் அதிக தோல்விப்படங்களை கொடுத்த நடிகராகியுள்ளார் விமல்.
