கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் நடத்தாமல் இருந்த விஜய் தற்போது மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதே சமயம் சமீபத்தில் கூட விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்குள் தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் செய்த அலப்பறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் சிலர் தளபதி விஜய்க்கு அரோகரா, தமிழக வெற்றி கழகத்திற்கு அரோகரா என்ற கோஷம் எழுப்புகிறார்கள். அதோடு அடுத்த வருடம் அறநிலையத்துறை டேக் ஓவர் செய்து பாஸ் வழங்குவோம், இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை என்று கூறி விஜயின் போட்டோவை காட்டி பக்தர்களிடம் வாக்குகளும் சேகரித்துள்ளன. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
