தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் மிளகா போன்ற படங்களை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. பிறகு வெயில் மாயாண்டி குடும்பத்தார் மனம் கொத்திப் பறவை தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தார். அதன்பிறகு காமெடி நடிகராக ரவி மரியா மாறினார். பல படங்களில் காமெடி கேரக்டரில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே இப்போது நடிகர் ரவி மரியா ஹீரோவாக உருவாகிறார். ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 3வது படத்தில் ராதாரவி, ரவி மரியா இருவரும் இரட்டை நாயகர்களாக நடிக்கின்றனர். பழகிய நாட்கள், மூன்றாம் மனிதன் ஆகிய திரைப்படங்களை தயாரித்த இயக்குனர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
அரசியலும் காமெடியில் கலந்த கதையில், சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதை உருவாகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரவி மரியாவுக்கு கதாநாயகி தேடும் படலம் இந்திய மாநிலங்களில் மட்டுமின்றி உலக அளவில் கதாநாயகி தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளதாக இயக்குனர் ராம்தேவ் கூறியிருக்கிறார்.
இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் வந்து பிறகு வில்லனாக நடித்தவர் ரவி மரியா. அதன்பிறகு காமெடி நடிகராக மாறியிருக்கிறார். இப்போது கதாநாயகனாக அவர் ஒரு படத்தில் நடிக்க உள்ள நிலையில் அவருக்கு உலக அளவில் கதாநாயகி தேடுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
