நடிகர் விமல் பாண்டியராஜ் இயக்கத்தில் ரிலீசான பசங்க திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக குருவி, கிரீடம், கில்லி ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விமலுக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது களவாணி திரைப்படம்.
இதனைத் தொடர்ந்து கலகலப்பு, தூங்கா நகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் விமல் நடித்தார். ஒரு சில படங்கள் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் விலங்கு என்ற வெப் சீரிஸ் மூலம் விமல் கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது சார், போகுமிடம் வெகு தூரம் இல்லை, தேசிங்குராஜா டு உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விமல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பின் அங்கிருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அங்கு பத்திரிக்கையாளர்கள் எப்படி இருக்கீங்க என கேட்டதற்கு விமல் நல்லா இருக்கேன். சாமி கும்பிட வந்திருக்கேன். நல்லபடியா தரிசனம் முடிந்தது என கூறினார்.
View this post on Instagram
அதன் பிறகு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த விமல் எனக்கு தெரியாது, அதை பத்தி எதுவும் தெரியாது என எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது என பதில் கூறினார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram