தமிழ் சினிமாவில் மிக பிரபலமான முன்னணி நடிகர் மற்றும் தென்னிந்தியாவின் அதிக ரசிகர்களைக் கொண்டவர் நடிகர் அஜித்குமார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நுழைந்தவர். பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அஜித்குமாரின் படங்கள் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி புகழடைந்துள்ளது.
நடிகர் மட்டுமல்லாது அஜித்குமார் பயிற்சிபெற்ற F1 கார் ரேசர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் பந்தய வீரரும் ஆவார். மும்பை, சென்னை மற்றும் டெல்லி போன்ற இடங்களில் இந்தியா முழுவதும் நடக்கும் ரேஸ்களில் போட்டியிட்டவர். சர்வதேச அரங்கிலும், ஃபார்முலா சாம்பியன்ஷிப்பிலும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் மிகச் சில இந்தியர்களில் இவரும் ஒருவர்.

Ajithkumar
கார் ரேசராக இருந்துக் கொண்டே மாடலிங்கும் செய்து வந்தார் அஜித்குமார். ஹெர்குலஸ் சைக்கிள் மற்றும் மோட்டார் நிறுவன விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் சினிமா வாய்ப்பினைப் பெற்றார் அஜித்குமார். 1990 ஆம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ திரைப்படத்தில் பள்ளிக் குழந்தையாக நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் அஜித்குமார்.
1993 ஆம் ஆண்டு ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அஜித்குமார். பின்பு நடிகர் விஜயுடன் இணைந்து 1995 ஆம் ஆண்டு ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் நடித்தார். 195 ஆம் ஆண்டு காதல் திரில்லர் திரைப்படமான ‘ஆசை’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். பின்பு 1996 ஆம் ஆண்டு இவர் நடித்த ‘காதல் கோட்டை’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. அதற்கடுத்து ஒரு கார் பந்தயத்தில் கலந்துக் கொண்டு விபத்தில் சிக்கய அஜித்குமார் சினிமாவில் சிறிய இடைவேளை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

Ajithkumar
விபத்தில் இருந்து மீண்டு வந்த அஜித்குமார் 1998 ஆம் ஆண்டு ‘காதல் மன்னன்’ திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைந்து ‘காதல் மன்னன்’ என்ற புனைபெயரைப் பெற்றார் அஜித்குமார். அதுமட்டுமல்ல ‘தல’, ‘அல்டிமேட் ஸ்டார்’ போன்ற பெயர்களையும் பெற்றார் அஜித்குமார். அதற்கு பிறகு முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் இன்றளவும் நடித்து வருகிறார் அஜித்குமார்.
அஜித்குமார் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல குணம் படைத்தவர், உதவிகள் செய்யும் கருணை உள்ளவர் மிகவும் எளிமையானவர், ரசிகர்களை பெரிதும் நேசிப்பவர். அதற்கு சான்றாக அஜித்குமார் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு உள்ளது. அஜித்குமார் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் பெப்சி விளம்பர படத்தில் நடிக்க அவரை அணுகினார்களாம். அதற்கு ஒரு கோடி ருபாய் சம்பளம் தருவதாகவும் பேசினார்களாம். ஆனால், அஜித்குமார் அவர்களோ இந்த விளம்பரத்தில் நடித்தால் எனது ரசிகர்கள் நான் குடிக்கும் குளிர்பானத்தை குடிப்பார்கள், அது அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று அந்த பெப்சி விளம்பரத்தில் நடிக்காமல் மறுத்துவிட்டாராம். அந்நேரத்தில் அஜித்குமார் பணக்கஷ்டத்தில் இருந்தாராம். இருந்தாலும் ரசிகர்கள் மீதிருந்த அதீத அன்பால் ஒரு கோடி ரூபாயை தூக்கி எறிந்து விட்டார் அஜித்குமார்.