இசையுலகின் ஜாம்பவான் இசைஞானி இளையராஜா இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் 1000 த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் இளையராஜா.
இசைஞானி இளையராஜா அவர்கள் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசைகளில் முறையான பயிற்சியையும் புலமையும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றவர். இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதையும் வென்றவர்.
இசைக்கு உயிர் தரும் பாடல் வரிகளை எழுதும் பிரபலமான பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து. தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற பாடலாசிரியரும், சிறந்த கவிஞரும் ஆவார். கவிப்பேரரசு வைரமுத்து இதுவரை 6000 த்திற்கும் மேற்பட்ட பாடல்களையும், நாவல்கள், புதினங்கள், சிறுகதைகள் ஆகியற்றை எழுதியவர்.
இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் இடையே சுவாரசியமான சம்பவம் ஒரு நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால் 1985 ஆம் ஆண்டு கே. பாக்கியராஜ் அவர்கள் எழுதி, இயக்கி, நடித்த படம் ‘சின்ன வீடு’. இந்த படத்திற்காக ஒரு பாடலை உருவாக்க இசைஞானி இளையராஜா அவர்கள் மெட்டை போட்டார். அவர் உருவாக்கிய அந்த மெட்டு மிகவும் வேகமாக இருந்தது. அதை வாங்கிக்கொண்ட பாக்கியராஜ் பாடல் வரிகள் எழுதுவதற்காக படலாசிரியருக்கு அனுப்பி வைக்கிறார்.
ஒன்றல்ல இரண்டு பேர் இளையராஜா அவர்கள் போட்ட மெட்டை கேட்டுவிட்டு இதற்கு வரிகள் எழுத முடியாது என்று மறுத்துவிட்டனர். செய்வதறியாத பாக்கியராஜ் அவர்கள் சினிமாவிற்கு புதிய வைரமுத்து அவர்களிடம் மெட்டை கொடுக்கிறார். ரெகார்டிங் தியேட்டரில் அனைவரும் வைரமுத்து அவர்களுக்காக காத்திருக்கின்றனர். அவ்வளவு வேகமான மெட்டிற்கு பாடல் வரிகளை எழுதி கொடுத்து அனைவரையும் ஆச்சர்ய பட வைத்துவிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து. அப்படி உருவான பாடல் தான் சின்ன வீடு படத்தில் இருக்கும் ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது’ பாடல் ஆகும்.