பிரபல ஹிந்தி நடிகையான கீர்த்தி சனோன் கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன நெனோக்கடனினே என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார் அந்த படம் தமிழில் நம்பர் ஒன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. அதன் பிறகு சபீர் கான் நடித்த ஹீரோபண்தி என்ற திரைப்படம் மூலம் ஹிந்தி திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்தில் தனது அருமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
ஹீரோபத்ணி திரைப்படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சனோனுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் வருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீசான காமெடி திரைப்படமான தில்வாலே படத்தில் நடித்தார். அதன்பிறகு 2017-ஆம் ஆண்டு ரிலீசான பரேலி கி பர்பி என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் 2019-ஆம் ஆண்டு ரிலீசான லூகா சூப்பி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் ஆகி கீர்த்தி சனோனுக்கு புகழை தேடி தந்தது. இந்த நிலையில் கீர்த்தி சனோனி தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பின்னர் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான கபீர் பாஹியாவும் உடன் இருந்தார். கபீர் பாஹியாவின் குடும்பம் லண்டனின் பணக்கார குடும்பங்களில் ஒன்று.
கிட்டத்தட்ட கஃபீர் பாஹியாவுக்கு 3500 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கீர்த்தி சனோனும் கபீர் பாஹியாவும் காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கீர்த்தி சனோனை விட கபீர் பாக்யாவுக்கு 10 வயது குறைவு. ஒருவேளை சொத்து அதிகமாக இருப்பதால் கீர்த்தி சனோன் அவரை காதலிக்கிறாரா என்ற பேச்சுக்களும் அடிபடுகிறது.