விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி.பரங்கனி கே.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் டிப்பர் லாரி ஓட்டுநரான சிவசாத்திரி. இவருக்கு விமலா என்ற மனைவியும், சிவமகி (16), விகாஷினி (14) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் இளைய மகளான 14 வயது விகாஷினி, கரசானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். ராணிப்பேட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கிப் படித்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
காதலை கைவிடுமாறு பெற்றோர் பலமுறை கண்டித்தும், விகாஷினி தொடர்ந்து காதலனுடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை சொந்த ஊரான வி.பரங்கனிக்கு அழைத்து வந்துள்ளனர். இருப்பினும் சிறுமி தனது காதலைக் கைவிடாமல் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த அக். 29-ஆம் தேதி அன்று தாயார் விமலா வேலூரில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விகாஷினி காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த தந்தை சிவசாத்திரி, அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது சகோதரர் சசிக்குமாரிடம் அவர் இதைத் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் உடனடியாகச் சென்று சிறுமியை மீட்டு வானூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வானூர் போலீசார், மகளைக் கொலை செய்த தந்தை சிவசாத்திரியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…