நரிக்குறவர்களின் நேரில் சந்தித்த நடிகர் சின்ன ஜெயந்தி மகன்.. அவர்கள் கொடுத்த அன்பு பரிசை ஏற்றார்.. வைரலாகும் புகைப்படம்..!

By Mahalakshmi on ஆடி 18, 2024

Spread the love

சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நரிக்குறவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

80’ஸ் மற்றும் 90’ஸ்களில் பேவரைட் காமெடி நடிகராக வலம் வந்தவர் சின்னி ஜெயன். காமெடி நடிகர் ஆக மட்டுமில்லாமல் ஹீரோக்களுக்கு இணையாக திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார். அஷ்டலட்சுமி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கும் சின்னி ஜெயன் மிமிக்ரி மற்றும் நகைச்சுவைக்காக டாக்டர் பட்டத்தையும் பெற்று இருக்கின்றார்.

   

   

இவர் தனது மகனை திரையுலகுக்கு கொண்டுவராமல் வேறு ஒரு திரையில் சிறந்து விளங்க செய்திருக்கின்றார். சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியாவில் 75 வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு லால் பகதூர் சாஸ்திரி மேலாண் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

 

பயிற்சி காலம் நிறைவடைந்த பிறகு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணைச்செயலாளராக பணியாற்றினார் ஸ்ருதன் ஜெய் நாராயணன். அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட பயிற்சி துணை ஆட்சியராகவும், திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியாகவும் பணியாற்றினார். தற்போது விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை அலுவலகத்தில் திட்ட அலுவலராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் தன்னுடைய பகுதியில் வாழும் நரிக்குறவர் மக்களின் குறைகளை நேராக சென்று கேட்டார். மேலும் வீட்டு மனை பட்டா இல்லாத 7 குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கினார். அப்போது அங்கிருந்து நரி குறவர்கள் பெண்கள் சிலர் தங்கள் கையால் செய்யப்பட்ட பாசி மாலைகளை ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு அணிவித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.