விடாமுயற்சி திரைப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியை தற்போது திரிஷாவுடன் சண்டை போட்டுள்ளதாக ஒரு புது தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த இவர் விடாமுயற்சியில் சிக்கிக்கொண்டு தவித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றது.
இப்படத்திற்கு பிறகு இவர் கமிட்டான திரைப்படம் தான் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிந்த பாடை காணோம் . அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஜவ்வு போல் படத்தை இழுத்துக் கொண்டே செல்கிறார்கள்.
இப்படத்தில் அஜித்துடன் சேர்த்து த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பொறுத்து பொறுத்து பார்த்த அஜித்தும் பட்டென்று அடுத்த படத்திற்கு கமிட்டாகி அப்படத்தில் நடித்து வருகின்றார்.
ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கூட தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விடாமுயற்சி படம் மட்டும் இன்னும் முடிந்த பாடேகாணம். இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் அஜித்துக்கும் இயக்குனர் மகிழ் திருமேனிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டு வந்தது.
இடைத்தொடர்ந்து நடிகர் அர்ஜுனுக்கும் இயக்குனருக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது திரிஷாவுக்கும் இயக்குனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தில் இருந்து அப்டேட் வருகின்றதோ இல்லையோ புதுசு புதுசாக பிரச்சினை மட்டும் வந்து கொண்டே இருக்கின்றது.