CINEMA
பிரபல நடிகர் அசோகனின் மகன் விஜய் பட வில்லன் நடிகரா?.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!!
தமிழ் சினிமாவில் முந்தைய காலத்தில் வில்லனாக நடிக்க வேண்டுமென்றால் ஒரு கட்டுப்பாடு இருந்தது. அதாவது வில்லனாக நடிப்பவருக்கு பாடி பில்டர் உடம்பு, கத்தி சண்டை மற்றும் வால் சண்டை தெரிந்திருப்பது என பல கண்டிஷன் போடப்பட்டது. எம்ஜிஆர் சிவாஜி படங்களில் டைட்டில் கார்டுகளில் அசோகன் BA என்று ஒரு பெயர் வரும். அந்தப் படத்தில் BA படித்த பட்டதாரி தான் வில்லனாக நடித்திருப்பார். அசோகன் இறங்கி சண்டை போட்ட படங்கள் என்று பார்க்கும்போது மிகவும் குறைவு தான்.
அசோகன் கோபப்பட்டால் கண்களை மூடிக்கொண்டு முகத்தில் அத்தனை பாவனைகளையும் வர வைத்து மிரட்டி விடுவார். தமிழ் சினிமாவில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஆஸ் துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்ச நட்சத்திர நடிகராக இருந்த இவர் தனது 52 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவர் இறந்து மூன்று வருடங்களில் அவருடைய மனைவியும் இறந்து விட்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு வின்சென்ட் மற்றும் அமல்ராஜ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றன. அதில் அமல்ராஜ் இறந்துவிட்ட நிலையில் அசோகனின் இரண்டாவது மகன் வின்சென்ட் தென்னிந்திய சினிமாவில் தற்போது முக்கிய நடிகராக உள்ளார். வின்சென்ட் அசோகன் என்ற பெயரில் தென்னிந்திய சினிமாவில் வில்லனாக மிரட்டி கொண்டிருக்கிறார்.
இவர் போக்கிரி திரைப்படத்தில் குரு என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார். அதனைப் போலவே அஜித்தின் ஆழ்வார் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தவிர ஏராளமான தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.