Connect with us

நீங்க Social Media யூஸ் பண்றீங்களா?.. இனி இந்த தவறை செய்தால் 3 ஆண்டு சிறை OR ரூ.3 லட்சம் அபராதம்.. போலீஸ் எச்சரிக்கை..!

NEWS

நீங்க Social Media யூஸ் பண்றீங்களா?.. இனி இந்த தவறை செய்தால் 3 ஆண்டு சிறை OR ரூ.3 லட்சம் அபராதம்.. போலீஸ் எச்சரிக்கை..!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தவிர பல சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்துகிறார்கள். இதில் பலரும் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டும் விதமாக பதிவுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

   

அதாவது ஒருவருக்கு நடனம் வந்தால் அவர் தனது நடந்த வீடியோவையும் சிலருக்கு கவிதை மற்றும் கதை எழுத தெரிந்தால் அது சார்ந்த பதிவுகளையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இது போன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயல்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் சமூக வலைத்தளங்களில் கணக்கு மட்டும் தொடங்கி வைத்துவிட்டு மற்றவர்களின் பதிவுகளை பார்க்கின்றனர்.

   

 

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை குறிவைத்து சிலர் மோசடிகளை தொடங்குகின்றனர். சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து பெண்களை மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 E படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பிரச்சனைகளை யாரேனும் சந்திக்கும்பட்சத்தில் 1930 எனும் தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Nanthini

More in NEWS

To Top