Connect with us

12 வயதில் தொடங்கிய பயணம்… இசைஞானியின் வாரிசு யுவன் கடந்து வந்த பாதை…

CINEMA

12 வயதில் தொடங்கிய பயணம்… இசைஞானியின் வாரிசு யுவன் கடந்து வந்த பாதை…

மூத்த இசையமைப்பாளர் இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜா அவர்களின் இளைய மகன் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் முன்னணி இசையமைப்பாளராகவும் பின்னணி பாடகராகவும் இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

   

யுவன் சங்கர் ராஜா அவர்களை ‘பிஜிஎம் கிங்’ என்று அழைப்பர். மேலும் ரீமிக்ஸ் பாடல்களை உருவாக்கும் கலாச்சாரத்தை தொடங்கியது யுவன் சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் பெயரையும் புகழையும் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ‘இளம் மாஸ்ட்ரோ’ என்று அழைக்கப்படுபவர் யுவன் சங்கர் ராஜா.

   

யுவன் சங்கர் ராஜா சிறுவயது முதலே இசையின் மீது ஆர்வம் கொண்டு பள்ளியில் பயிலும் போதே இசைக்கருவிகளை பயன்படுத்துவதைப் பற்றி கற்க தொடங்கினார். தனது 12 வயதின் முதலே இசை பயணத்தை ஆரம்பித்த யுவன் சங்கர் ராஜா தனது 15 வது வயதில் 1996 ஆம் ஆண்டு ஒரு ஆல்பத்திற்கு இசையமைத்தார். பின்னர் பதினாறாவது வயதில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா.

 

1998 ஆம் ஆண்டு ‘வேலை’ மற்றும் ‘கல்யாண கலாட்டா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் அது பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் 1999 ஆம் ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் திருப்புமுனையை பெற்று பிரபலமானார் யுவன் சங்கர் ராஜா. பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவின் இசை இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனது. அவரது குரல் சோகத்தில் இருப்பவருக்கும் ஆறுதலாக இருந்தது. 2000 களின் பிற்பகுதியில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்தார் யுவன் சங்கர் ராஜா. தான் இசையமைத்து அதில் அவர் பாடும் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.

ஒரே வருடத்தில் 10 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது விஜய் நடித்த வெளியாகியுள்ள கோட் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. தனது இசைக்காக இரண்டு பிலிம்பேர் விருதுகள், மிர்சி மியூசிக் விருதுகள், விஜய் விருதுகள் மற்றும் இரண்டு தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார் யுவன் சங்கர் ராஜா. கடந்த 25 வருடங்களுக்கு மேல் 170 படங்களுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

More in CINEMA

To Top