Categories: சினிமா

நடிகை அமலாவை துரத்தி துரத்தி காதலித்த வில்லன் நடிகர்… ஆனாலும் இப்படி நடந்திருச்சே…

Spread the love

நடிகை அமலா கல்கத்தாவில் பெங்காலி கடற்படை அதிகாரிக்கு மற்றும் ஐரிஷ் தாய்க்கும் பிறந்தவர். பின்னர் சென்னைக்கு குடி பெயர்ந்த அமலா அங்கு வளர்ந்தார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் அமலா. 1986 முதல் 1992 வரை தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார் அமலா.

1986 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கி நடித்த மைதிலி என்னை காதலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் அமலா. பிறகு அதே ஆண்டு மெல்ல திறந்தது கதவு திரைப்படத்தில் மோகனுடன் நடித்தார். இந்த படத்தில் மூலம் பேரும் புகழும் அடைந்தார் அமலா. இந்த படத்தின் பாடல் அனைத்தும் ஹிட் ஆகி பட்டி தொட்டி எங்கும் பரவியது.

தொடர்ந்து பன்னீர் நதிகள், வேலைக்காரன் போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தார் அமலா. ரஜினிகாந்த் கமலஹாசன் உடன் நடித்து பாராட்டுகளை பெற்றார். 1992 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனாக்கு இரண்டாவது மனைவியாக அவரை மணந்து திரையுலகில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார் அமலா. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராகவும் இருக்கிறார்.

1987 ஆம் ஆண்டு அமலா நடித்த திரைப்படம் கூட்டுப்புழுக்கள். இத்திரைப்படத்தில் ரகுவரன், சரிதா, சந்திரசேகர், ஒய் விஜயா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆர் சக்தி இயக்கிய இத்த திரைப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது பிற்காலத்தில் பிரபல வில்லன் நடிகராக திகழ்ந்த ரகுவரன் அமலாவை துரத்தி துரத்தி சின்சியராக காதலித்தாராம்.

அமலாவை காதலிப்பதை ரகுவரன் அவரிடம் தெரியப்படுத்தி இருக்கிறாராம். ஆனால் அமலா காதலில் நாட்டமில்லை என்று ரிஜெக்ட் செய்துள்ளார். இதற்குப் பிறகு தான் நடிகர் ரகுவரன் ரோகினியை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கும் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

10 minutes ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

35 minutes ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

36 minutes ago

“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…

45 minutes ago

பிரேசிலை வீழ்த்திய ஆவேசம்… ஆடை இல்லாமல் இருந்த ஹாலாந்தை கட்டிப்பிடித்த நார்வே இளவரசி… உடைமாற்றும் அறையில் பரபரப்பு…!

2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று-16 போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற…

47 minutes ago