Categories: சினிமா

நடிகையாக சுகன்யாவின் ஏக்கம்… திட்டிதீர்த்த KS ரவிக்குமார்…

Spread the love

சுகன்யா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தவர் சுகன்யா. நடிப்பை தவிர சுகன்யா ஒரு பரதநாட்டிய நடன கலைஞர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் குரல் நடிகையாக பயிற்சி பெற்றவரும் ஆவார்.

1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சுகன்யா. பின்னர் 1992 ஆம் ஆண்டு சின்ன கவுண்டர் திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் மூலம் பேரும் புகழும் அடைந்தார் சுகன்யா. பட்டி தொட்டி எங்கும் அந்த படம் பிரபலமானது.

தொடர்ந்து செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் சத்யராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் சுகன்யா.

1990களில் முன்னணி நடிகையாக இருந்த சுகன்யா 2000 களில் பிற்பகுதியில் சின்னத்திரை தொலைக்காட்சியில் அடி எடுத்து வைத்தார். ஆனந்தம், சுவாமி ஐயப்பன், ஆதிபராசக்தி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார் சுகன்யா. ஆனாலும் சுகன்யாவுக்கு தனக்கு நடிப்பு வாழ்க்கையில் ஒரு ஏக்கம் இருந்துள்ளது. இதை பற்றி அவருடைய நேர்காணலில் கூறியிருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால், நான் எல்லா நடிகர்களுடன் நடிச்சிட்டேன். நான் சேர்ந்து நடிக்காத ஒரே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்தான். அது எனக்கு ரொம்ப ஏக்கமாகவே இருக்கும். இப்படித்தான் ஒரு தடவை விமான நிலையத்துல கே எஸ் ரவிக்குமார் சார பார்த்தேன். அப்பா அவர் என்னை பார்த்த உடனே ரொம்ப திட்டிட்டாரு. ரஜினிகாந்த் கூட நடிக்கிற வாய்ப்பை நீ வேண்டாம்னு சொல்லிட்டேன்னு சொல்லி திட்டுனாரு. நான் எனக்கு எதுவுமே தெரியாது, என்ன ஆச்சுன்னு கேட்டேன்.

அப்போ கே எஸ் ரவிக்குமார் சொன்னாரு வீரா படத்தில ரோஜா கதாபாத்திரத்துக்கு உன்னை தான் கேட்டாங்க. ஆனா நீ தான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேனு சொன்னாங்க என்று கூறியுள்ளார் கே எஸ் ரவிக்குமார். அதை கேட்டு நான் ரொம்ப அதிர்ச்சி ஆயிட்டேன். இது எனக்கே தெரியாம என்னோட நாலேஜ் இல்லாம இது நடந்து இருக்கு இது எப்படி நடந்ததுன்னு எனக்கு தெரியல என்று கூறி புலம்பி இருக்கிறார் சுகன்யா.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

1 மணத்தியாலம் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

1 மணத்தியாலம் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

1 மணத்தியாலம் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

2 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

2 மணத்தியாலங்கள் ago