சூப்பர் குட் நியூஸ்… கிராம உதவியாளர் பணியிடம்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

தமிழகத்தில் கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு இந்த மாதம் நேர்காணல் நடைபெற இருந்தது. இந்த நேர்காணல் அரசிடம் இருந்து வயது நிர்ணயம் செய்வது தொடர்பான புதிய அறிவுரைகளை பெறப்பட்டுள்ள காரணங்களுக்காக தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் திருத்தப்பட்ட வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு பணிநீய மனம் தொடர்பான நடைமுறைகள் விவரம் பிறகு அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று பணிக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பொது பிரிவினருக்கான வயது 32, BC, MBC, DNC பிரிவினருக்கான வயது 39, எஸ்சி எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான வயது வரம்பு 42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை வருவாய்த்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.