‘லால் சலாம்’ FDFS பார்க்க வந்த லதா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்.. சுத்தி வளைத்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ.

By Ranjith Kumar on பிப்ரவரி 9, 2024

Spread the love

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நடிப்பில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட பின் அப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் தன் தந்தையை ரஜினிகாந்த்தவர்களை கௌரவத் தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார். இப்படம் கௌரவத் தோற்றத்தில் ரஜினி நடிக்கிறார் என்றதுமே பரபரப்பு செய்தியாக மாறியது.

   

இப்படத்திற்கு அதுவே பிரமோஷன் ஆகிவிட்டது, இருந்தாலும் இது முழுக்க முழுக்க ரஜினி படமாக மட்டும்தான் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் சூப்பர் ஸ்டார் ஆடியோ வெளியீட்டு விழாவில் டைலர் போஸ்டர் தன்னால் முடிந்த ப்ரமோஷனை செய்தார்.
அதனால் படம் நிச்சயம் கோடிக்கோடி இப்படம் வசூலிக்கும் என்று கருத்து எதிர்பார்க்கப்பட்டது.இன்று லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனம் இருந்தாலும், சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியானதால் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

   

 

தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் இயக்கியதால் அப்பிடத்தில் கௌரவ இடத்தில் தன் கணவன் ஆனா ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருப்பதால் இப்படத்தை திரையரங்குகளில் வந்து ரசிகர்கள் மத்தியில் படத்தை பார்க்க வந்த ரஜினிகாந்த் மனைவியான லதா ரஜினிகாந்த் அவர்கள் மற்றும் அவர்களுடன் இப்படத்தின் ஹீரோவான விஷ்ணு விஷால், விக்ராந்த் அவர்களும் படத்தை பார்ப்பதற்கு திரையரங்குகளுக்கு வந்திருக்கிறார்கள். விஷ்ணு விஷால் இடம் செய்தியாளர் ஒருவர் இப்படத்தை பற்றி கேட்டதற்கு இது முழுக்க முழுக்க என் படம் அல்ல தலைவர் படமே என்று சொல்லிவிட்டு திரையரங்கிற்குள் படம் பார்ப்பதற்கு சென்று விட்டார். அதன் பின் லதா ரஜினிகாந்த் அவர்களும் வந்து இவர்களுடன் இணைந்தார். இதைக் கண்ட ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றார்கள்.