காதலியிடம் உண்மையாக இருக்கும் காதலன்… மணிகண்டனின் ‘LOVER’ படம் எப்படி இருக்கு..? வெளியான ட்விட்டர் விமர்சனம்…

By Begam

Published on:

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் குட் நைட் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘லவ்வர்’ . ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

   

டிரைலர் வெளியான போது இப்படத்திற்கு ரசிகர்கள் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா..? இல்லையா..? என்பதை  நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதுமட்டுமின்றி இத்திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம் படத்திற்கு போட்டியாகவும் திரையிடப்பட்டது.

தனது காதலியை தன் கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் காதலன்.. அவனால் பல பிரச்சனைகளை சந்திக்கும் காதலி.. இறுதியில் சேர்ந்தார்களா? இவர்களின் காதல் என்ன ஆனது? இதுவே லவ்வர் படத்தின் கதையாக அமைந்துள்ளது.  தற்பொழுது இத்திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது  விமர்சனத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.   இதோ பிரபலங்களின் ரிவியூ…

ஆர்.ஜே பாலாஜி :

 “இன்றைய காலத்தில் காதல் எப்படி கையாளப்படுகிறது என்பதை லவ்வர் படத்தில் பார்த்து முற்றிலும் நேசித்தேன். கிளைமாக்ஸ் காட்சிகள் அபாரமாக இருக்கிறது. மேலும் மணிகண்டன், கௌரி மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பு திறமை மற்றும் எழுத்து அற்புதம். குட் நைட் படத்தை தொடர்ந்து மணிகண்டனின் மற்றொரு தரமான படம். லவ்வர் பட குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவு செய்துள்ளார்.

கிறிஸ்டோபர் கனகராஜ்:

பிரஷாந்த் ரங்கசுவாமி:

இத்திரைப்படத்தில் அருண் என்ற கதாபத்திரமாகவே வாழ்ந்துள்ளார் மணிகண்டன். அதேபோல காதலிக்கும் பெண்களின் குமுறலாக தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார் கெளரி. மேலும் இத்திரைப்படத்தில் மது, சிகரெட், போதைபொருள் உபயோகம் அதிகளவில் உள்ளது. இதனை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மொத்தத்தில் லவ்வர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையே பெற்றுள்ளது.