ஒரே பதிவில் ‘லால் சலாம்’ படத்தை பங்கம் பண்ணிய Blue சட்டை மாறன்.. இப்டி ஓப்பனா கலைக்கலாமா..?

By Ranjith Kumar

Published on:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் ஐஸ்வர்யா இருக்கும் விஷ்ணு விஷால் நடிக்கும் என்று அலட்சியமாக பார்க்கப்பட்ட இப்படம் ரஜினி நடிக்கிறார் என்றதுமே பரபரப்பு செய்தியாக மாறியது. இப்படத்திற்கு அதுவே பிரமோஷன் ஆகிவிட்டது,ஆனால் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் வருகிறார் என்ற செய்தி கொஞ்சம் ஏமாற்றம் அடைய வைத்தது. இருந்தாலும் இது முழுக்க முழுக்க ரஜினி படமாக மட்டும்தான் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் சூப்பர் ஸ்டார் ஆடியோ வெளியீட்டு விழாவில் தன்னால் முடிந்த ப்ரமோஷனை செய்தார்.


மேலும் டிரெய்லர், போஸ்டர் என ஒவ்வொன்றும் ரஜினியை முன்னிறுத்தியே செய்யப்பட்டது. அதனால் படம் நிச்சயம் கோடிக்கோடி இப்படம் வசூலிக்கும் என்று கருத்து கணிப்புகளும் வெளியானது. ஆனால் தற்போது ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டு இருக்கும் ஒரு போட்டோ மொத்தத்தையும் காலி செய்து இருக்கிறது.பிரபல பத்திரிக்கை ஒன்று லால் சலாம் படத்திற்கு டிக்கெட் எதுவும் எதிர்பார்த்த அளவு புக் ஆகவில்லை என தெரிவித்திருக்கிறது. அதை அப்படியே போட்டோவாக வெளியிட்டு இருக்கும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

   

மேலும் ரஜினி படத்திற்கு என ஒரு மாஸ் பட ரிலீஸ் அன்று இருக்கும். ஆனால் லால் சலாம் படத்திற்கு அப்படி இல்லை என்றும் பல தியேட்டர்களில் இருக்கைகள் காலியாக இருக்கிறது என்றும் அவர் நக்கல் அடித்துள்ளார். இதற்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் தக்க பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.இது ரஜினி படமே கிடையாது. அவர் கேமியோ ரோலில் தான் நடிக்கிறார் என்று தற்போது கமெண்டுகள் பறந்து கொண்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வந்தால் தான் ஒரு முடிவுக்கு வர முடியும். அது மட்டுமல்லாமல் வார இறுதி நாளில் நிச்சயம் இப்படம் வசூல் வேட்டையாடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Ranjith Kumar