விக்ரம் நடிப்பில் உருவான வீரசோழன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. அதன் பிறகு இந்த திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் ஈடுபட்டிருந்தனர். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில் படம் மார்ச் 27ஆம் தேதி மாலை தான் வெளியானது.

வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல்கள் இருந்ததால் சொன்னபடி இந்த திரைப்படம் அன்று காலை வெளியாகவில்லை. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிக்கல்களை சமாளித்து இந்த திரைப்படத்தை மாலை முதல் திரையரங்குகளில் வெளியிட்டனர். என்னதான் இந்த திரைப்படம் முதல் நாள் மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டாலும் வசூல் நன்றாகவே அமைந்திருந்தது.

முதல் நாளில் வீர தீர சூரன் திரைப்படம் மூன்று கோடி வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில் காலை முதலே படம் திரையிடப்பட்டு இருந்ததால் வசூல் மேலும் அதிகரித்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று வெறும் 3.5 கோடி மட்டுமே வசூலித்த நிலையில் மொத்தமாக இரண்டு நாட்களில் இந்த திரைப்படம் ஆறு கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. பல சிக்கல்களை சந்தித்து படம் வெளியானாலும் வசூலில் அடிவாங்கியுள்ளது. இன்றும் நாளையும் வார விடுமுறை என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
