தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஷாஜகான். இந்த திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் ஹீரோயினி ஆக நடித்திருந்தவர் தான் நடிகை ரிச்சா பலோட். ஷாஜகான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் ஹீரோயினியாக அறிமுகமானார். ஒரு மாடலாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய இவர் 1991 ஆம் ஆண்டு லம்மே என்ற இந்தித் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

பின்னர் தான் ஷாஜகான் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு பார்த்திபனுடன் இணைந்து காதல் கிறுக்கன் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவர் ஆதி நடிப்பில் வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு சில தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் நடிப்பிலிருந்து விலகியுள்ளார்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு Himanshu Bajai என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் உள்ளார். இப்படியான நிலையில் நடிகை ரிச்சா பலோட்டின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாஜகான் பட நடிகையா இது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே என்று கேட்டு வருகிறார்கள்.

