விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆன சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் ஸ்ருதி நாராயணன். கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இரண்டு ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. குமரன் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில் வெற்றி வசந்த் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் கோமதி பிரியா ஹீரோயினியாக நடித்து வருகின்றார். மேலும் இந்த சீரியலில் இயக்குனர் மற்றும் நடிகரான ஆர் சுந்தர்ராஜன், சல்மா அருண், அனிலா ஸ்ரீகுமார், தேவா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.
இந்த சீரியலில் வித்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் ஸ்ருதி நாராயணன். கல்லூரி காலத்தில் இருந்தே சீரியல் வாய்ப்பு தேடத் தொடங்கிய இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணன் அந்தரங்க வீடியோ ஒன்று கடந்த ஒரு வாரமாக சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வந்த நிலையில் அது உண்மை கிடையாது ஏஐ வீடியோ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நானும் பெண்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனக்கும் உணர்ச்சிகள் உள்ளது. நெருக்கடியான சூழலில் உள்ளேன்.
அதனை சிலர் மோசமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வீடியோக்களையும் இப்படி பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்கள் அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண்தான். அவர்களுக்கும் என்னைப் போன்ற உடல் தான் உள்ளது. என்னை குறை கூறிக் கொண்டிருக்கும் சிலர் இதுபோல வீடியோ வெளியிடும் நபரை ஒரு கேள்வி கூட ஏன் கேட்பதில்லை என்று ஸ்ருதி வருத்தத்துடன் இந்த பதிவை போட்டுள்ளார்.