அது என்ன டாப் 3..? நானும் சாமி, தூள் மாதிரி படங்களை பண்ணிருக்கேன்.. என்னோட லட்சியம் வேற.. Thug ரிப்ளை கொடுத்த விக்ரம்..!!

By admin on ஆவணி 12, 2024

Spread the love

நடிகர் விக்ரம் சேது திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் விக்ரம் வல்லவர். இப்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் நடித்துள்ளார். வருகிற 15ஆம் தேதி தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் ப்ரமோஷன் பணிகளில் விக்ரம் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

   

அப்போது விக்ரமிடம் ஒவ்வொரு முறையும் சிறந்த நடிப்பை கொடுத்து அசர வைக்கிறீங்க. ஆனால் விஜய், அஜித், சூர்யாவுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உங்களுக்கு குறைவாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விக்ரம் என்னோட ரசிகர் பட்டாளம் பற்றி உங்களுக்கு சரியாக தெரியவில்லை. தங்கலான் படம் ரிலீஸ் ஆகும்போது தியேட்டருக்கு வந்து பாருங்கள். என் ரசிகர் பட்டாளம் என்னவென்பது உங்களுக்கு தெரியும். அது என்ன டாப் 3, 4, 5 என்ற நம்பர் கணக்கெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு அதை பற்றி கவலையும் கிடையாது.

   

 

சினிமாவை நேசிக்கும் எல்லாருமே எனக்கு ரசிகர்கள் தான். நான் தூள், சாமி போன்ற படங்களையும் பண்ணி இருக்கேன். அதுபோன்ற படங்களை எனக்கு பண்ண தெரியும். ஆனா என்னோட லட்சியம் வேற. புது புது பரிணாமங்களில் புதுப்புது கதைகளில் நடித்து சினிமாவை உயர்ந்த இடத்துக்கு எடுத்துச் சொல்லணும்னு நான் முயற்சி பண்றேன். அதுதான் என்னோட ஆசை. குறை சொல்ற மாதிரி எந்த ஒரு படத்திலும் நான் நடித்து இருக்க மாட்டேன். ராவணன் படம் ஹிந்தியில் எடுத்து சரியாக ஓடல.

ஆனால் தமிழ்ல நான் நடிச்ச ராவணன் படம் தான் சிறந்த படம் என்று இன்னைக்கு வரைக்கும் சொல்லுவாங்க. தங்கலான், வீரதீர சூரன் என ஒவ்வொரு படத்தையும் சிறந்த படங்களாக மாற்ற முழு முயற்சியுடன் நடிக்கிறேன். அதுதான் எனது பாணி. நீங்க தியேட்டருக்கு வந்து பாருங்க என் ரசிகர்களை பற்றி உங்களுக்கு தெரியும். விஜய், அஜித், சூர்யா அளவிற்கு எனக்கு ரசிகர்கள் இல்லை என சொல்றீங்க. ஒரு நாள் இதே கேள்வியை நீங்க அவங்க கிட்ட கேட்பீங்க என பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title