போட்டிக்கு நாங்களும் வரலாமா..? பிக் பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்க ஆசைப்படும் புதிய ஜோடி..!!

By admin on ஆவணி 12, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக் பாஸ் ஏழு சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் பிக் பாஸ் 8 சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி ஆரம்பித்து விட்டது.

   

ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக இதுவரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பிஸியாக இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவதாக கூறிவிட்டார். இதனால் கமல்ஹாசனுக்கு பிறகு அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற கேள்வி தான் எழுதுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ஓடிடி-க்காக நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.

   

 

மேலும் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது ஒரு எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆர்வம் காட்டுகிறார்களாம். இருவரும் ஏற்கனவே நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை இருவரில் யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்ற போட்டி நிலவுகிறது. முன்னரே விஜய் சேதுபதி ஒரு தொல்லைக் காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதேபோல நடிகை ஆவதற்கு முன்பு நயன்தாராவும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். நயன்தாரா அல்லது விஜய் சேதுபதி இருவரில் யாராவது ஒருவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.