“சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை”.. பா.ரஞ்சித் – விக்ரம் காம்போவின் ‘தங்கலான்’ பட ட்ரைலர் வெளியானது..

By Mahalakshmi on ஆடி 10, 2024

Spread the love

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்களான் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்களான். இந்த திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன் பசுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒரு பீரியட் படமாக இந்த திரைப்படத்தை எடுத்துள்ளார்கள். மேலும் ஸ்டுடியோ கிரீன் சார்பாக இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

   

   

படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆனபோதிலும் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே தான் இருக்கின்றது. கடைசியாக ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் பட குழுவினர் தங்களான் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

மக்களின் உடை, தோற்றம், மொழி, கலை என அனைத்துமே பிரம்மாண்டமாக காட்டப்பட்டுள்ளது. விக்ரமின் நடிப்பு அசரடிக்க வைத்துள்ளது. மேலும் பார்வதியின் தோற்றமும் மாளவிகா மோகனின் தோற்றமும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதால் கதாபாத்திரங்கள் அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ளதாக உணர்த்தப்படுகின்றது. கிராபிக் காட்சிகள் மட்டும் சற்று பிசிறு அடிக்கின்றது என பலரும் கூறி வருகிறார்கள்.

ஜி வி பிரகாஷின் பின்னணி இசை அற்புதமாக இருக்கின்றது எனவும், விக்ரம் பேசும் சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும்தான் இந்த வாழ்க்கை என்ற வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தத்தில் விஷுவல் ஸ்ட்ரைட்டாக இந்த திரைப்படம் இருக்கும் என்று ட்ரெய்லரை உணர்த்தி இருக்கின்றது.

இப்படத்தின் ரிலீஸ் எதுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து இந்த திரைப்படமும் இவருக்கு மிகச்சிறந்த வெற்றி படமாக அமையும் என பலரும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.