பிரபல தயாரிப்பாளரான எஸ் தானு கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வீக் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார். முதன் முதலாக கடந்த 1988-ஆம் ஆண்டு ரிலீசான நல்லவன் படத்தை தயாரித்தார். அதன் பிறகு வண்ண வண்ண பூக்கள், கிழக்கு சீமையிலே, கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், புன்னகை பூவே,.காக்க காக்க, மாயாவி, சச்சின், கந்தசாமி, துப்பாக்கி, தெறி, கபாலி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் தலைப்புலி எஸ் தானு அளித்த பேட்டியில் கூறியதாவது, கிழக்கு சீமையிலே படம் வெற்றி அடைந்த பிறகு ஒவ்வொருவருக்கும் செட்டில்மெண்ட் செய்தேன். அப்போது ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை வைரமுத்துவிடம் கொடுத்தேன். பொதுவாக பாரதிராஜா இயக்கும் படங்களுக்கு நான் சம்பளம் வாங்க மாட்டேன்.
ஆனால் இதுவரை நான் எழுதின பாட்டுக்கள் எல்லாம் சேர்த்து மொத்தமா நீங்க கொடுத்துட்டீங்க. நீங்க ஒரு குட்டி தேவர் என வைரமுத்து சொன்னார். அவருக்கும் எனக்கும் சில மனஸ்தாபங்களும் இருந்தது. ரஜினி சார் நடிப்பில் கபாலி படத்தை உருவாக்கினோம். படம் ரிலீஸ் ஆகி ரிசல்ட் வருவதற்கு முன்னரே வைரமுத்து ஒரு பேட்டியில் கபாலி படம் தோல்வியடையும் என கூறிவிட்டார். அவர் இரண்டு மூன்று முறை பேட்டிகளில் அப்படி கூறியது மனஸ்தாபத்தை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு கபாலி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கினார். ராதிகா ஆப்தே, கிஷோர் குமார், தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கபாலி திரைப்படம் உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.