ஆதவ் அர்ஜுனாவுக்கு பறந்த நள்ளிரவு போன் கால்… “உடனே ரிப்போர்ட் வேணும்”… விஜய்யின் ரகசிய ‘சர்வே’ பிளான்….!

By Nanthini on சித்திரை 19, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி மேற்கு ஆகிய இரு தொகுதிகளிலும் நிலவும் சூழல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல மாவட்டங்களில் அவரது பிரச்சாரப் பயணங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ரத்து நடவடிக்கைகளுக்கான உண்மையான காரணங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கே தெரியாத நிலையில், விஜய்யை எப்போதும் நிழல் போலத் தொடரும் அந்த ‘முக்கிய மூன்று நபர்களுக்கு’ மட்டுமே இந்த ரகசியங்கள் தெரியும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தன்னால் அனைத்து இடங்களுக்கும் நேரில் வர முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். கள நிலவரம் குறித்துப் பேசிய பொறுப்பாளர்கள், விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமே தங்களுக்குப் பெரும் பலமாக இருப்பதாகவும், ஆனால் ஆளும் கட்சியினரும் சில அதிகாரிகளும் வேட்பாளர்கள் மக்களைச் சென்றடைவதில் முட்டுக்கட்டை போடுவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். வேட்பாளர்களை மக்களிடம் அறிமுகப்படுத்துவதில் உள்ள சவால்களைக் கேட்டறிந்த விஜய், சோர்ந்து போகாமல் உழைக்குமாறு தனது நிர்வாகிகளுக்குத் தைரியம் கூறியுள்ளார்.

   

நிர்வாகிகளிடம் உரையாற்றிய விஜய், தேர்தல் பிரச்சாரத்தை விட மிக முக்கியமான இரண்டு சவால்களைக் கோடிட்டுக் காட்டியுள்ளார். “வாக்குப்பதிவு நாளன்று பூத் கமிட்டி அளவில் ஆளும் கட்சியினர் செய்யும் அரசியலை எதிர்கொள்வது முதல் சவால் என்றால், வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படக்கூடிய குளறுபடிகளைத் தடுப்பது இரண்டாவது பெரிய சவால்” என்று எச்சரித்துள்ளார். பூத் ஏஜென்ட்களாக வலுவான நபர்களை நியமிக்குமாறும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் கட்டளையிட்டுள்ளார். ஆளும் தரப்பின் நெருக்கடிகளையும் மீறி வெற்றியை வசப்படுத்த ஸ்ட்ராங்கான வியூகம் அமைக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.

   

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த கையோடு, விஜய் தனது வீட்டிற்குச் சென்றதும் அடுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அரசியல் ஆலோசகர் ஆதவ் அர்ஜுனாவைத் தொடர்பு கொண்ட விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதிகளின் தற்போதைய கள நிலவரம் குறித்துத் துல்லியமான சர்வே எடுத்துத் தருமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. கடைசி நேரத் திருப்பமாக அந்தத் தொகுதிகளில் மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப தனது இறுதித் திட்டத்தை வகுக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த ரகசிய சர்வே முடிவுகளுக்காகத் தற்போது தவெக மேலிடம் ஆவலுடன் காத்திருக்கிறது.