நடிகர் விஜய். இவர் இப்போது அரசியலுக்கு வருவார், அப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரோ அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் பிசியாகி வருகிறார். வாரிசு படம் நடித்தக் கையோடு லியோ படத்தில் நடிக்கத் தொடங்கினார். அப்படம் வெளியாவதற்கு முன்பே தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு பிறகும் அடுத்தடுத்து படங்களின் கதைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படி அவரது 69-வது படத்தை யார் இயக்க இருப்பது என்பதில் தான் தற்போது போட்டி நிலவுகிறது.

#image_title
கடந்த சில மாதங்களாக GOAT படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்து கோடை கொண்டாட்டமாக வெளியிட வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தான் நடித்து வரும் ஒரு படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்ததுமே அடுத்தப் படத்தினை தேர்வு செய்வதில் விஜய் குறியாக இருந்து வருகிறார்.

#image_title
அப்படியிருக்க, அவரது 69-வது படம் யாருக்கு செல்ல இருக்கிறது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் அவரது 69-வது படத்தை, RRR திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இதற்காக பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு புறம் வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டு இருப்பதாகவும், அதற்கு அவர் ஓகே சொல்லி விட்டதாகவும், இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அவர் 2 ஆண்டுகளுக்கு பிரேக் எடுத்து அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூட கூறப்படுகிறது. எது உண்மை என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

#image_title
