அடடே., இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களே.. மகளின் பிறந்தநாளன்று நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ..

By Mahalakshmi

Updated on:

சுகாசினி நாயுடு என்ற இயற்பெயர் கொண்டவர்  சினேகா; தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

   

2001 ல் வெளியான “நீலப்பாசி” என்ற மலையாள திரைபடத்தில் நடித்ததன் மூலம் சினி உலகில் அறிமுகமானார். மேலும் “என்னவளே” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக தமிழ் சினிமா துறையில் என்ட்ரி கொடுத்தார். சினேகா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் போன்ற மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார். குடும்ப பாங்கான முகத்தோற்றத்திற்காகவும் தனது நடிப்புத் திறமைக்காகவும், அழகான சிரிப்பாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நடிகை சினேகா மம்முட்டி நடிப்பில் வெளியான “ஆனந்தம்” திரைப்படத்தில்நடித்துள்ளார். இதில்  ‘புல்லாங்குழலில் வட்டம் பார்த்தேன்’ பாடலின் மூலம் பிரபலமடைந்தார். இதற்காக தமிழ்நாடு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. மேலும் பல படங்களில் நடித்து வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விகான் என்ற ஆண் குழந்தையும், ஆத்யந்தா என்ற  பெண் குழந்தையும் உள்ளது.

இன்று சினேகாவின் மகளான ஆத்யந்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில் நீண்ட செல்வத்துடனும், பெரியவர்கள் ஆசிர்வாதத்துடனும் வாழ்க என் உயிர் மகளே என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ் செய்தும்  சினேகாவின் மகளுக்கு   பிறந்தநாள்  வாழ்த்து தெரிவித்தும் ரசிகர்கள்  வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi