ரவீணா என்கிட்ட அப்டித்தான் இருந்தா.. BB-க்கு பிறகு முதல் முறையாக ரவீணா குறித்து பேசிய மணி.. வைரலாகும் வீடியோ..

By Archana

Published on:

பிக்பாஸ் சீசன் 7 கடந்த சில தினங்களுக்கு முன்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி, பிரதீப் ஆண்டனி, அன்னபாரதி, தினேஷ், அர்ச்சனா, ஜோவிகா, பூர்ணிமா, ஆர்.ஜே.பிராவோ, கானா பாலா, கூல் சுரேஷ், ரவீனா, மணி சந்திரா, விஷ்ணு விஜய், நிக்சன், அக்‌ஷயா, ஐஷூ, மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், விசித்ரா என மொத்தம் 23 பேர் களம் கண்டனர். இதுவரை வந்த எந்த சீசனிலும் இத்தனைப் பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டினுள் சென்றதில்லை.

Mani Raveena

இரண்டு வீடு, ஒரே கிச்சன் என புதுமையான அம்சங்களுடன் தொடங்கிய இந்த சீசனில் பல போட்டியாளர்கள் இடை இடையே வீட்டினுள் வந்தனர். அதில் பலர் ஜொலித்தனர், பலர் அமைதியாகவே சென்று விட்டனர். கடந்த ஜனவரி 14-ம் தேதி இந்த பிக்பாஸ் சீசனின் கடைசி இறுதிச் சுற்று நடைபெற்றது. இறுதியாக மாயா கிருஷ்ணன், மணி சந்திரா மற்றும் வி.ஜே.அர்ச்சனா ஆகியோர் போட்டியில் இருந்தனர். இதில் வி.ஜே.அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

   
Mani Raveena 1

எப்போதுமே பிக்பாஸ் சீசன் ஒவ்வொரு ஆண்டும் வரும் போது நிச்சயம் பிரச்னைகளும் வரும். அப்படி இந்த வருடமும் பல பிரச்னை, சச்ரவுகளுக்கு மத்தியில் பிக்பாஸ் முடிந்திருக்கிறது. பாதியில் சென்ற அர்ச்சனாவுக்கு பதில் 105 நாட்கள் வீட்டில் இருந்த மணி சந்திராவுக்கு இந்த டைட்டில் சென்றிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிக்பாஸை முடித்துவிட்டு நேர்காணல் கொடுத்திருந்த மணி சந்திரா, வீட்டினுள் யார் யாரெல்லாம் உண்மையாக இருந்தார்கள் என்பதற்கு பதில் அளித்துள்ளார்.

maxresdefault 10

அதன்படி, திணேஷ் எதையுமே உண்மையாக வெளிப்படையாக கூறி வந்ததாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து விஷ்ணுவும் ஏதேனும் கோபப்பட்டாலும் பிறகு அதற்கு வருத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களை தவிரித்து பலர் விளையாட்டுக்காக பொய்யாக இருப்பதாக தெரிவித்ததாகவும், கூல் சுரேஷ், ரவீனா போன்றோர் உண்மையாக இருந்ததாக கூறியிருக்கிறார்.

author avatar
Archana