தாமரையில் தண்ணீரே ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க… மேடையில் பஞ்ச் பேசிய விஜய்…!

By Nanthini on ஆவணி 21, 2025

Spread the love

கலை நிகழ்ச்சியுடன் தவெக மதுரை மாநாடு தொடங்கியது.  விஜய் நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதையும் செலுத்தப்பட்டது. பிறகு மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதியின் பெயரில் உறுதிமொழியேற்பும் நடைபெற்றது. இதனையடுத்து தலைவர் விஜய் தொடங்கியது கட்சி அல்ல புரட்சியை தொடங்கினார்.   கோடிக்கணக்கான மக்கள் படை இவர் பக்கம் உள்ளனர். இதற்கு பெயர் தான் சத்தம் இல்லாமல் சாதனை செய்வது என்று பொதுச்செயலாளர் ஆனந்த் தொடக்க உரையை தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றி வரும் விஜய், தாமரையில் தண்ணீர் கூட ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஓட்டுவார்கள். நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என பிரதமர் அறிவிப்பாரா? பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்துக்கொண்டு வெளியே எதிர்ப்பது போல நாடக மாடிக் கொண்டிருக்கிறது திமுக. பாஜக – அதிமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி என பேசியுள்ளார்.