MGR கிட்ட அது கிடைக்கல… ஆனா என் அண்ணன் கேப்டன் விஜயகாந்திடம் அது கிடைத்தது… மாநாட்டில் ஆக்ரோஷமாக பேசிய விஜய்..!!

By Soundarya on ஆவணி 21, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தடபுடலாக நடந்தது. இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு கட்சி மாநாடும் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது இல்லை. தற்போது மாநாடு தொடங்கியுள்ளது. விஜய் நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாநாட்டு திடலில் 40 அடி கொடி கம்பத்தில் அக்கட்சியின் கொடியை ஏற்றினார் தலைவர் விஜய். தற்போது பேசி வரும் விஜய், தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல். சினிமாவிலும் அரசியலிலும் என் தலைவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த். அவரும் இந்த மதுரையில் பிறந்தவர் தானே. இந்த மண்ணுக்கு வந்தவுடன், எனக்கு மனசுக்குள் ஓடியது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய எண்ணங்கள்தான். ஆனால் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை ஆனால் அவரைப்போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன், புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு நிறையவே கிடைத்தது என்று பேசியுள்ளார்.