BREAKING: 2026 இல் திமுக – தவெக இடையே தான் போட்டி.. அடிபணிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… விஜய் அதிரடி..!

By Nanthini on ஆவணி 21, 2025

Spread the love

கலை நிகழ்ச்சியுடன் தவெக மதுரை மாநாடு தொடங்கியது.  விஜய் நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதையும் செலுத்தப்பட்டது. பிறகு மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதியின் பெயரில் உறுதிமொழியேற்பும் நடைபெற்றது. இதனையடுத்து தலைவர் விஜய் தொடங்கியது கட்சி அல்ல புரட்சியை தொடங்கினார்.   கோடிக்கணக்கான மக்கள் படை இவர் பக்கம் உள்ளனர். இதற்கு பெயர் தான் சத்தம் இல்லாமல் சாதனை செய்வது என்று பொதுச்செயலாளர் ஆனந்த் தொடக்க உரையை தொடங்கினார்.

இந்நிலையில் மாநாட்டில் உரையாற்றி வரும் விஜய், அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஆர் எஸ் எஸ் இடம் அடிபணியாத கூட்டணி தவெக. மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? 2026 இல் இரண்டு கட்சிகள் இடையே தான் போட்டி. ஒன்று தவெக, மற்றொன்று திமுக தான்.