நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது அப்பா விஜய் போல சினிமாவில் ஹீரோவாக விரும்பாமல் தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல பெரிய டைரக்டராக வரவேண்டும் என்ற ஆசையில் திரைப்பட இயக்குனராக களத்தில் இறங்கினார். அவர் இயக்கிய முதல் படம் சிம்கா. தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்த இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு தனது அப்பா நடிகர் விஜயுடன் வேட்டைக்காரன் என்ற படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே என்ற ஒரு பாடல் காட்சியில் சிறுவனாக ஆடியவர்தான் ஜேசன் சஞ்சய். இப்போது அவர் இயக்கிய சிம்கா படத்திலும் ஒரு பாடல் காட்சியில் நடிகை கேத்தரின் தெரசாவுடன் அவர் சேர்ந்து சில நிமிடங்கள் நடனமாடி இருக்கிறார்.
மேலும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் டிடிடி படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவியுடன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் நேரில் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பின்போது அவர்கள் இருவரும் அடுத்த படம் குறித்து பேசியதாக தெரிகிறது. தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிக்கும் படத்தில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அல்லது அவர் தயாரிக்கும் படத்தை அவர் 2வது படமாக டைரக்ட் செய்யவும் வாய்ப்புள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…